search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஸ்போர்ட் சேவை மையம்"

    அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #PassportSewaKendra
    புதுடெல்லி:
     
    இந்திய வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் சுஷ்மா சுவராஜ். வெளிநாடுகளில் இந்தியர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் தொடர்பான டுவிட்களுக்கு சம்பந்தப்பட்ட நாடுகளின் இந்திய தூதரகம் மூலம் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், தனது கருத்துக்களையும் டுவிட்டரில் பதிவிட்டு வருவது வழக்கம்.

    இந்நிலையில், அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது என வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டில் மொத்தம் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் 308 பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது 4 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

    எனவே, அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பதை மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார். #SushmaSwaraj #PassportSewaKendra
    ×